search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூயார்க் பங்குச்சந்தை"

    ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்த படியாக உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை எட்டி சாதனை படைத்துள்ளது. #Amazon #JeffBezos
    நியூயார்க்:

    இ-காமர்ஸ் சந்தையில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்க நிறுவனமான அமேசான், கடந்த சில ஆண்டுகளாக கனிசமான வளர்ச்சியை பெற்று வருகிறது. அமேசான் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கடக்கும் என சில நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய பங்குச்சந்தை திறந்ததும் அந்நிறுவனத்தின் மதிப்பு எகிறிக்கொண்டே சென்றது. 

    ஒரு கட்டத்தில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை அமேசான் எட்டியது. கடந்த 10 மாதங்களில் அந்த நிறுவனத்தின் மதிப்பு இரண்டு மடங்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 2-ம் தேதி ஆப்பிள் இந்த சாதனையை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை எட்டியது.
    உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை தொட்டுள்ளது. வியாபார உலகில் இந்த சாதனையை எட்டும் முதல் நிறுவனம் என்ற பெயரை ஆப்பிள் பெற்றுள்ளது. #Apple
    நியூயார்க்:

    உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. 

    அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும் 17 சதவீதம் உயர்ந்து 53.3 பில்லியன் டாலர் வரையில் சென்றது. இன்றைய பங்குச்சந்தை தொடங்கியதும் ஆப்பிளின் சந்தை மதிப்பு எகிறிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற உச்சத்தை ஆப்பிள் நிறுவனம் எட்டியது.

    இந்த அளவுக்கு ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது இதுவே முதன்முறையாகும். கடந்த ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 41.3 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ×